-17401321776469.png?v=1740132178)
-17401321740902.png?v=1740132174)
Junglee Games India Private Limited அமைப்பிலிருந்து தரவுகளைக் கோரும் சட்ட அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கான (“LEA”) கொள்கைகள்.

சட்ட அமலாக்க அதிகாரிகள்
நமது பயனர்களின் விவரங்களைக் கோர, சட்ட அமலாக்க அதிகாரிகள் அவர்களுடைய அலுவலக அரசு மின்னஞ்சல் முகவரியிலிருந்து (Gov.in/nic.in) disputes@jungleegames.com எழுதலாம்.
-17379928108819.png?v=1737992811)
LEA உடன் பகிரக்கூடிய தகவல்
பதிவு செய்யப்பட்ட தேதி, தனிநபர் தகவல், KYC, பரிவர்த்தனை விவரம், புவியிடம், சாதனத்தின் பரிவர்த்தனை IP முகவரி, ரொக்கப் பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்ட இடத்தின் அட்ச ரேகை / தீர்க்க ரேகை.
-17379928139347.png?v=1737992814)
தரவு சேமிப்பு
இந்தியாவில் பல்வேறு இடங்களில் இருக்கும் சர்வர்களில் பயனர் தரவுகள் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் சேமிக்கப்படுகிறது.
-17379928170159.png?v=1737992817)
நோடல் அதிகாரியின் விவரங்கள்
பெயர்: திருமதி. அபூர்வா சர்மா
மின்னஞ்சல் முகவரி: nodalofficer@jungleegames.com
-17379928046611.png?v=1737992805)
KYC சரிபார்ப்பு விவரங்கள்: iOS / Apple StoreAPK தளங்களுக்கு
பதிவு செய்திருக்கும் ஒரு பயனர் டெபாசிட் செய்யும் தொகையின் கூட்டுத் தொகை ₹50,000/- -ஐ அடையும்போது அல்லது முதல் முறை வித்ட்ரா செய்யும்போது, இதில் எது முதலில் நிகழ்கிறதோ, அப்போது கே.ஒய்.சி சரிபார்ப்பு கட்டாயமாகும். Google Play Store - தளங்களுக்கு: பதிவு செய்திருக்கும் ஒரு பயனர் ரொக்கப்பண பரிவர்த்தனை அல்லது ரொக்கப்பணம் டெபாசிட் செய்யும்போது KYC சரிபார்ப்பு கட்டாயமாகும்.
6வது மாடி நார்த் டவர், ஸ்மார்ட்வொர்க்ஸ், வைஷ்ணவி டெக் பார்க், சர்ஜாபூர் மெயின் ரோடு, பெல்லந்தூர் , பெங்களூரு, கர்நாடகா 560103என்ற முகவரியில் தனது கார்ப்பரேட் அலுவலகத்தை கொண்ட சிஐஎன் எண் U72200DL2011PTC219472 இன் கீழான Junglee Games India Private Limited (இதன் பிறகு JGIPL/Junglee Games/கம்பெனி என்று குறிப்பிடப்படும்) நிறுவனமானது தி கம்பெனி ஆக்ட்ஸ், 1956-இல் வழங்கப்பட்டுள்ளவற்றின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனமாகும். Junglee Games ஒரு பொறுப்பான கேமிங் பிளாட்ஃபார்ம் ஆகச் செயல்பட்டு வருகிறது மற்றும் அது இ-கேமிங் ஃபெடரேஷனில் (“EGF”) ஓர் உறுப்பினராகவும் இருக்கிறது. Junglee Rummy, Rummy.com, Junglee Poker, Howzat, Junglee11 மற்றும் Junglee Ludo ஆகியவை உட்பட திறன் அடிப்படையிலான பல்வேறு ஆன்லைன் கேம்களை Junglee Games வழங்கி வருகிறது. நிறுவனத்தின் பொறுப்புடன் கூடிய கேமிங் நடைமுறைகள் குறித்த மேலதிக தகவல்களை அனைத்து கேமிங் வலைத்தளங்கள் மற்றும் ஆப் -களில் இருக்கும் “ரெஸ்பான்சிபிள் கேமிங்” பக்கத்தில் காணலாம். இந்த கேம்கள் மற்றும் தரவுகள் இந்தியாவில் வழங்கப்படுகின்றன. மேலும் Junglee Games அமைப்பு மிஸ். அபூர்வா ஷர்மாவை ஒரு நோடல் அதிகாரியாக நியமித்திருக்கிறது. Read More
இந்த பாலிசி Junglee Games -இடமிருந்து தரவுகளைக் கோரும் இந்தியாவிலுள்ள சட்ட அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு (“LEA”) உதவும் தனிப்பட்ட நோக்கத்தைக் கொண்டது. எங்கள் நிறுவனம் குறித்தும் மற்றும் பிளேயர்/பயனர் கணக்குகள் குறித்தும் மேலதிக பொதுவான தகவல்களுக்கு நீங்கள் எங்கள் தனியுரிமை கொள்கை மற்றும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைக் காணலாம். Junglee Games பிளேயர்/பயனர்களிடமிருந்து சேகரிக்கும் தரவுகளின் வகைகளைப் பற்றி புரிந்துகொள்ள நீங்கள் எங்கள் தனியுரிமை கொள்கைகளையும் காணலாம். இந்த கொள்கை மற்றும் இதர கொள்கைகள் மற்றும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை அவ்வப்போது திருத்தியமைக்கும் உரிமையை நாங்கள் தக்கவைத்துக் கொண்டுள்ளோம். மேலும் இந்தியாவுக்கு வெளியே இருந்து வரும் LEA கோரிக்கைகளுக்கு இந்த கொள்கை பொருந்தாது என்பதை கவனத்தில் கொள்ளவும். பிளேயர்/பயனர்களின் தனியுரிமையை நாங்கள் மதிக்கிறோம் மற்றும் எங்கள் தளத்தில் பிளேயர்/பயனர்களின் தரவுகளை பாதுகாப்பதற்கு நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். ஆகவே Junglee Games அமைப்பிலிருந்து தரவு பதிவுகளைப் பெறுவதற்கான கோரிக்கை சட்டப்படியான தேவைகள் மற்றும் சட்டப்பூர்வ நோக்கங்களுக்கு இணக்கமாக இருக்க வேண்டும். முறையான சட்டப்பூர்வ கோரிக்கைகள் / அறிவிப்புக்களை LEA அமைப்பிலிருந்து பெற, பின்தொடர, செயலாக்க மற்றும் எதிர்வினையாற்றுவதற்கான தனிப்பட்ட வழிமுறைகளை Junglee Games கொண்டுள்ளது. LEA அமைப்பிலிருந்து பெறப்படும் அனைத்து அறிவிப்புக்கள் /கோரிக்கைகளையும் எங்களின் பயிற்சி பெற்ற ஒரு சர்ச்சை/டிஸ்ப்யூட் தீர்வு காணும் அமைப்பு மீளாய்வு செய்யும். இந்தியாவிலுள்ள LEA Junglee Games அமைப்பிலிருந்து ஒரு பிளேயர்/ பயனர் கணக்கு குறித்த தகவல்களைப் பெற விரும்பினால், அங்கீகரிக்கப்பட்ட அவர்களது அரசு மின்னஞ்சல்(Gov.in/nic.in), முகவரியிலிருந்து எங்களுக்கு disputes@jungleegames.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதலாம். அத்தகைய கோரிக்கையை பெற்ற உடன், பிரிவு 91 குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973 (“CRPC”) அல்லது பாரதீய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா 2023 பிரிவு 94 (“BNSS”) -இன் கீழ் வழங்கப்பட்டவை உட்பட மேலே குறிப்பிட்ட இயற்றுச் சட்டங்களில் வகுத்துரைக்கப்பட்ட நடைமுறைகளின் படி செல்லத்தக்க சட்ட நடைமுறைகளை மேற்கொண்ட பிறகே தரவுகளை வெளிப்படுத்தும் உரிமையை நாங்கள் தக்கவைத்துக்கொண்டுள்ளோம்.
வரையறைகள்
APK:
ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் பேக்கேஜ் அல்லது ஆண்ட்ராய்ட் பேக்கேஜ் கிட்
BNSS:
பாரதீய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, 2023
CRPC:
குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1973
iOS:
Apple Store / iPhone ஆப்பரேட்டிங் ஸ்டோர்
KYC:
KYC சரிபார்ப்புகளில் பதிவு பெற்ற பயனர் அடையாள ஆவணம் இதில் பதிவு பெற்ற பயனர் அடையாள ஆவணம் (“ID”) , முகவரி மற்றும் மொபைல் எண் ஆகியவை உள்ளடங்கும்.
LEA:
காவல்துறை அதிகாரிகள், சிபிஐ அதிகாரிகள், சைபர் செல்ஸ், CID, ஊழல் எதிர்ப்புக் கண்காணிப்புத் துறை அதிகாரிகள் போன்ற சட்டத்தை அமல்படுத்துவதற்கு பொறுப்பான சட்ட அமலாக்க அதிகாரிகள்.
PSRMG:
Play store ரியல் மணி கேம்ஸ் - Rummy மற்றும் Daily Fantasy Sports (DFS)
1. Junglee Games அமைப்பின் மூலம் தரவுகளுக்கான கோரிக்கையை எவ்வாறு எழுப்புவது?
- இந்தியாவிலுள்ள LEA Junglee Games அமைப்பிலிருந்து ஒரு பிளேயர்/ பயனர் கணக்கு குறித்த தகவல்களைப் பெற விரும்பினால் எங்களுக்கு disputes@jungleegames.com; என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதலாம்; அத்தகைய கோரிக்கை ஒரு செல்லுபடியாகும் அரசு மின்னஞ்சல் தளத்திலிருந்து சமர்ப்பிக்கப்பட வேண்டும், உதாரணமாக, Gov.in/nic.in;
- கோரிக்கை அறிவிப்பு ஒரு சட்ட நடைமுறையாக இருக்க வேண்டும் உதாரணமாக, சமர்ப்பிக்கப்படும் அறிவிப்பு சட்டப்பிரிவு 91CrPC அல்லது சட்டப்பிரிவு 94 BNSS -இன் கீழ் குறிக்கப்பட்டிருக்க வேண்டும்;
- நாங்கள் LEA அமைப்பிலிருந்து வரும் தரவுகளுக்கான கோரிக்கைகளுக்கு எங்களது தனிப்பட்ட சேனல் disputes@jungleegames.com மூலம் பதிலளிக்கிறோம். ஆகவே கோரிக்கைகள் disputes@jungleegames.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.
- சட்டப்பிரிவு 91 CRPC அல்லது சட்டப்பிரிவு 94 BNSS-இன் கீழ் சமர்ப்பிக்கப்படும் அறிவிப்புக்கள் முறையான அமைப்பு - Junglee Games India Private Limited நிறுவனத்திற்கு அனுப்பப்பட வேண்டும்;
- அந்த வழக்கு எண் /DD எண்/ புகார் எண் / FIR எண் அல்லது விசாரணை தொடங்கப்பட்டதை வெளிப்படுத்தும் வேறு எந்த ஒரு எண்ணும் கோரிக்கையில் உள்ளிடப்பட வேண்டும்;
- எங்களின் வசதிக்காக நீங்கள் வழக்கின் தன்மை அல்லது இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் (“IPC”) அல்லது பாரதீய நியாய் சன்ஹிதா (“BNS”) அல்லது இந்தியாவில் வேறு எந்தவொரு பொருந்தத்தக்க சட்டத்தின் கீழான சம்பந்தப்பட்ட வேறு எந்த ஒரு பிரிவுகளையும் வெளிப்படுத்தலாம் மற்றும் எங்களிடம் கோரப்படும் தரவு தொடர்பான உங்கள் தேவை/அவசியம்/ பொருந்தும் தன்மை ஆகியவை குறித்து புரிந்துகொள்ள எங்களுக்கு உதவும் வகையிலான வேறு எந்த ஒரு தகவலையும் எங்களுக்கு அளிக்கவும்;
- மேலும் பரிவர்த்தனை விவரங்கள், பரிவர்த்தனை குறிப்பு எண், தொகை,தேதி, நேரம் மற்றும் பயனரின் BII போன்ற அத்தகைய முறையான அடையாளக் குறியீடுகளையும் எங்களுக்கு வழங்குங்கள் அது எங்கள் தேடுதலை துல்லியமாக மேற்கொள்ள உதவி பயனர் கணக்கு /பரிவர்த்தனை விவரங்களை துல்லியமாகக் கண்டறிய உதவும்;
- பரிவர்த்தனை விவரங்கள், பயன் பெறும் வணிகர்/வங்கி மற்றும் மோசடியாளர் அடையாளம் அடங்கிய கோரிக்கைகளைப் பொருத்தவரை கேஒய்சி, கருவி வரிசை/IMEI எண்கள், IP முகவரி, நிலவியல் அமைவிடம், மின்னஞ்சல் முகவரி மற்றும் பெறுபவர் மொபைல் எண், போன்றவை வழங்கப்பட வேண்டும். இத்தகைய அடையாளக் குறியீடுகள் பொதுவாக கருவிகள், கணக்குகள் அல்லது நிதிபரிவர்த்தனைகள் தொடர்பான தகவல்களை பெறுவதற்கான ஒரு முழுமையான விசாரணையை மேற்கொள்ள தேவைப்படும்.
2. LEA இலிருந்து பெறப்பட்ட புகார்களை நிர்வகித்தல் மற்றும் பதிலளித்தல்.
- Junglee Games எந்த ஒரு கோரிக்கையும் தெளிவற்றதாக அல்லது முறையற்றதாக அல்லது முழுமை பெறாமல் இருப்பதாக கருதினால் அது குறித்து மேலும் விளக்கம் பெறுவது தொடர்பாக அதன் கவலைகளை LEA அமைப்பிடம் தெரிவிக்கும் அல்லது தரவுகளை அடையாளம் காண / மீட்டெடுக்க உள்ளக தேடுதல்களை மேற்கொள்ளும் பொருட்டு மேலும் அதிக தகவல்களை கோரும்.
- தேவையான தகவல்களை 24 மணி நேரத்திற்குள் வழங்க Junglee Games அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும். இருப்பினும் பன்னாட்டு தரவுத் தளங்களில் இருந்து தகவல்களை பெறுவதில் சற்று காலதாமதம் விளையக் கூடிய சந்தர்ப்பங்களில் அது சம்பந்தமாக தரவுகள் எந்த தேதிக்குள் பகிரப்படும் என்பது குறித்து LEA அமைப்பிற்கு ஏற்றுக்கொள்ளத்தக்கவகையிலான ஒரு கால அளவை நிர்ணயித்து தெரிவிக்கும்.
3. Junglee Games அமைப்பால் பூர்த்தி செய்யப்பட வேண்டிய கோரிக்கைகள்
பின்வரும் வழிமுறைகளில் வழங்கப்படும் கோரிக்கைகளை Junglee Games அமைப்பால் பூர்த்தி செய்ய முடியாது:
- வாய்மொழி / தொலைபேசி அழைப்பு மூலமான எழுத்துவடிவத்தில் இல்லாத கோரிக்கைகள்;
- பிரிவு 91சிஆர்பிசி அல்லது பிரிவு 94 பிஎன்எஸ்எஸ்-இன் கீழான அல்லது நீதி மன்ற உத்தரவு போன்றவை இணைக்கப்படாத கோரிக்கைகள்;
- யாக அரசு மின்னஞ்சல் முகவரி (Gov.in/nic.in) மூலம் அனுப்பப்படாத கோரிக்கைகள்;
- WhatsApp, Telegram, LinkedIn, Twitter, Facebook, போன்ற சமூக ஊடக சேனல்கள் வழியாக அனுப்பப்படும் கோரிக்கைகள்.
4. LEA அமைப்பு மூலம் Junglee Games -க்கு வழங்கப்பட வேண்டிய தகவல்கள்
பரிவர்த்தனை / கணக்கு விவரங்களை அடையாளம் காண உள்ளக தேடுதல்களை மேற்கொள்ள உதவும் வகையில் ஒரு முழுமையான தகவல்கள் மற்றும் போதுமான அடையாளங்களை வழங்குமாறு LEA அமைப்பிடம் கேட்டுக்கொள்ளப்படுகிறது. தேவைப்படும் சந்தர்ப்பங்களில், LEA அமைப்பிற்கு சம்பந்தப்பட்ட மிகப் பொருத்தமான தகவல்களை அளித்து உதவவும் மற்றும் பிளேயர்கள் /பயனர்களின் தரவுகளை பாதுகாக்கவும் தரவு கோரிக்கையின் பொருந்தும் தன்மை குறித்து LEA அமைப்பின் விசாரணை /வழக்குக்கு Junglee Games கோரிக்கை வழங்கும்.
5. Junglee Games மூலம் LEA அமைப்பிற்கு வழங்கப்பட வேண்டிய தகவல்கள்
பிரிவு 91 CRPC அல்லது பிரிவு 94 BNSS-இன் கீழ் எங்களுக்கு வழங்கப்பட்ட அறிவிப்பில் தெளிவாக குறிப்பிட்ட தரவு கோரிக்கை வரப்பெற்றவுடன் Junglee Games கீழே குறிப்பிட்ட பதிவேடுகளின் படியான கோரப்பட்ட தரவுதொகுப்பை வழங்கும்:
1. கீழே குறிப்பிடப்பட தகவல்களுக்கும் கூடுதலாக ஒரு Junglee Games பிளேயர்/பயனர் கணக்கின் பரிவர்த்தனை வரலாறு அல்லது வாலட் அறிக்கையை LEA-கள் அமைப்பிற்கு வழங்கும்;
ஒரு பிளேயரின் கணக்கு சம்பந்தமாக பின்வரும் தகவல்களை Junglee Games வழங்கும்: பதிவு செய்யப்பட்ட நாள், பெயர், மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி, முகவரி, PAN, KYC விவரங்கள் பரிவர்த்தனை தகவல்கள், தொகை எடுத்த விவரங்கள், வங்கிக் கணக்குத் தகவல்கள், கருவியின் பரிவர்த்தனை IP முகவரி பரிவர்த்தனை எப்போது தொடங்கப்பட்டது மற்றும் பிளேயரால் மேற்கொள்ளப்பட்ட எந்த ஒரு ரொக்கத் தொகை நடவடிக்கையின் அட்சய ரேகை அண்ட் தீர்க்க ரேகை
பின்வருபவற்றுக்கு உட்பட்டு இருக்கும்:
i.மேலே குறிப்பிட்ட விவரங்கள் இருக்கும் பட்சத்தில் மட்டுமே பகிர்ந்து கொள்ளப்படும்.
ii.கோரிக்கை அறிவிப்பில் குறிப்பாக கூறப்பட்ட தகவலை மட்டுமே Junglee Games வழங்கும்.
iii. பேமோட் தரவுகள் எங்களிடம் இல்லை. அதற்கு நிகரான தொடர்புடைய பேமெண்ட் அக்ரகேட்டரால் அதை பகிர்ந்து கொள்ள முடியும். அந்த குறிப்பிட்ட பரிவர்த்தனையுடன் சம்பந்தப்பட்ட பேமெண்ட் அக்ரகேட்டரின் பெயரை எங்களால் பகிர்ந்து கொள்ள முடியும்.

பொறுப்பு துறப்பு:LEA-கள் அமைப்பால் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளுக்கும் உரிய நேரத்தில் பதிலளிப்பதற்கு உதவும் வகையில் இந்த கொள்கை வழங்கப்படுகிறது. தகவல் கோரப்படும் நேரத்தில் அதன் அதிகாரபூர்வமான பதிவேடுகளில் இருக்கும் உண்மையான மற்றும் சரியான தகவல்களை வழங்க அனைத்து முயற்சிகளையும் Junglee Games மேற்கொள்ளும்.
இந்தக் கொள்கை குறித்து கேள்விகள் ஏதாவது உங்களுக்கு இருக்குமானால் எங்கள் நோடல் அதிகாரி /நோடல் தொடர்பு அதிகாரி மிஸ் அபூர்வா ஷர்மா அவர்களை nodalofficer@jungleegames.com என்ற முகவரியில் நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)
பிரிவு 91CRPC அல்லது பிரிவு 94 BNSS-இன் கீழ் அறிவிப்புக்கு பின்வரும் மாதிரி வடிவமைப்பைப் பார்க்கவும்:
பிரிவு 91CRPC அல்லது பிரிவு 94 BNSS- இன் கீழ் அறிவிப்பை வெளியிடுவதற்கான டெம்ப்ளேட்*
பெறுநர்: Junglee Games India Private Limited
தேதி:
புகார் எண் / FIR எண் / DD எண்:
கோரிக்கை/விசாரணை/புகாரின் தன்மை:
கோரப்பட்ட தகவல்கள்:
தரவின் அடையாளங்காட்டிகள் / அடையாளங்கள்:
மேலே குறிப்பிடப்பட்ட தகவலைத் தேடுவதற்கான காரணத்தைப் புரிந்துகொள்வதில் எங்களுக்கு உதவும் மற்ற சம்பந்தப்பட்ட தகவல்/விளக்கம்:
விசாரணை செய்யும் அதிகாரியின் பெயர்:
பதவி / அதிகாரம் / கையொப்பம் / முத்திரை:
* இது ஒரு மாதிரி வடிவம் மற்றும் பிரிவு 91CRPC அல்லது பிரிவு 94 BNSS-இன் கீழ் அறிவிப்பாகக் கருதப்படக்கூடாது என்பதை நினைவில் கொள்ளவும்.
* அனைத்து பங்குதாரர்களும் பொறுப்புடன் கேம் விளையாடக்கூடிய பாதுகாப்பான, நியாயமான மற்றும் வெளிப்படையான ஆன்லைன் கேமிங் சூழலை நாங்கள் பரிந்துரைக்கிறோம்.